MARC காட்சி

Back
அருள்மிகு அகத்தீசுவரர் கோயில்
245 : _ _ |a அருள்மிகு அகத்தீசுவரர் கோயில் -
246 : _ _ |a ஆனாங்கூர் சிவன் கோயில்
520 : _ _ |a ஆனாங்கூர் அகத்தீசுவரர் கோயில் முற்காலச் சோழ அரசருள் ஒருவரான கண்டராதித்திச் சோழனின் மனைவியார் செம்பியன் மாதேவியாரால் கற்றளியாக்கப்பட்டது. எழில்மிகு இக்கற்றளி சோழர் கலைப்பாணிக்கு சான்றாகத் திகழ்கிறது.
653 : _ _ |a கோயில், சைவம், ஆனாங்கூர், அகத்தீசுவரர் கோயில், கற்றளி, நாகப்பட்டினம், குத்தாலம், செம்பியன் மாதேவியார், முற்காலச் சோழர், சோழர் கலைப்பாணி
700 : _ _ |a American Institute of Indian Studies
710 : _ _ |a American Institute of Indian Studies
905 : _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு / உத்தமசோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது.
914 : _ _ |a 11.0728798
915 : _ _ |a 79.5569872
916 : _ _ |a அகத்தீசுவரர்
918 : _ _ |a சௌந்தரநாயகி
926 : _ _ |a பிரதோஷம், சிவராத்திரி
927 : _ _ |a உத்தமசோழர் காலக் கல்வெட்டுகள் விமானத்தின் தாங்குதளத்தில் காணப்படுகின்றன.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a முகமண்டபத்தின் தென்புறச்சுவரின் கிழக்கு மூலையில் விநாயகர் காணப்படுகிறார். அடுத்து இரண்டாவது கோட்டத்தில் அகத்தியரும் மூன்றாவது கோட்டத்தில் சிதிலமடைந்த நடராஜரும் காணப்படுகின்றனர். கருவறையின் தென்பகுதிக் கோட்டத்தில் புன்னகையுடன் தட்சிணாமூர்த்தி எழிலாக அமர்ந்திருந்தார். மேற்சொன்ன அமைப்பிலேயே கருவறையின் மேற்குப் பகுதியில் லிங்கோத்பவரும் வடக்குப் பகுதியில் பிரம்மாவும் எழிலுடன் அமைந்துள்ளனர். இம்மூன்று கோட்டங்களிலும் மகரதோரணங்களும் காட்டப்பட்டுள்ளன. முகமண்டப வடக்குச் சுவரில் உள்ள கோட்டங்களில் பிச்சாடனர், துர்க்கை, மற்றும் அம்மையப்பர் காட்சி அளிக்கின்றனர். கோயிலை அடுத்து உள்ள மரத்தடியில் ஒரு சேட்டை தேவியின் சிலையும் உள்ளது.
932 : _ _ |a இக்கோயிலின் கட்டமைப்பு ஜகதி, எண்பட்டைக் குமுதம், கண்டம் மற்றும் பட்டிகை பெற்றுப் பாதபந்தத் தாங்குதளமாக அமைந்துள்ளது. முகமண்டபத்திலிருந்த இந்த மூன்று கோட்டங்களிலும் நான்முக அரைத்தூண்கள் அணைவு பெற்றிருந்தன. முகமண்டபம் முடிவுபெற்று கருவறைப்பகுதி ஆரம்பமாகிறது. முகமண்டபக் கோட்டத்தில் இருமருங்கிலும் நான்முக அடிப்பாகம் கொண்ட விஷ்ணுகாந்தத் தூண்கள் உள்ளன. தூண்களின் மேற்பகுதியான வீரகண்டத்திற்குமேல் பட்டையுடன் கூடிய குளவுத் தரங்கப்போதிகைகள் உள்ளன. போதிகைகள் தாங்கும் உத்திரத்திற்கு மேல் வாஜனமும் அதற்குமேல் வலபியும் கூரையும் அமைந்துள்ளன. வலபியில் பூதவரிகள் அழகுடன் காட்டப்பட்டுள்ளன. கூரைப்பகுதி முன்னிழுக்கப்பட்டுக் கபோதமாகக் காட்டப்பட்டுக் கூடுகள் அமைந்துள்ளன. இக்கபோதத்திற்குமேல் பூமிதேசம் காட்டப்பட்டு முதல்தளம் முடிவடைகிறது. அடுத்து சிமெண்ட் தளமாக இரண்டாம் தளம் மற்றும் விமானம் உயருகிறது. விமானத்தின் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கில் சதுரக்கட்டுக் கொண்ட விஷ்ணுகாந்தத் தூண்கள் கொண்டு இரண்டு கர்ணபத்திகளும் ஒரு சாலைப்பத்தியும் அமைக்கப்பட்டுள்ளன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறை
934 : _ _ |a திருமணஞ்சேரி, திருவாவடுதுறை
935 : _ _ |a குத்தாலத்திலிருந்து 2 கி.மீ.
936 : _ _ |a காலை 6.00 -12.00 முதல் மாலை 4.00-8.00 வரை
937 : _ _ |a ஆனாங்கூர்
938 : _ _ |a மயிலாடுதுறை
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a மயிலாடுதுறை விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000158
barcode : TVA_TEM_000158
book category : சைவம்
cover images TVA_TEM_000158/TVA_TEM_000158_நாகப்பட்டினம்_அகஸ்தீசுவரர்-கோயில்-0010.jpg :
Primary File :

TVA_TEM_000158/TVA_TEM_000158_நாகப்பட்டினம்_அகஸ்தீசுவரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000158/TVA_TEM_000158_நாகப்பட்டினம்_அகஸ்தீசுவரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000158/TVA_TEM_000158_நாகப்பட்டினம்_அகஸ்தீசுவரர்-கோயில்-0003.jpg

TVA_TEM_000158/TVA_TEM_000158_நாகப்பட்டினம்_அகஸ்தீசுவரர்-கோயில்-0004.jpg

TVA_TEM_000158/TVA_TEM_000158_நாகப்பட்டினம்_அகஸ்தீசுவரர்-கோயில்-0005.jpg

TVA_TEM_000158/TVA_TEM_000158_நாகப்பட்டினம்_அகஸ்தீசுவரர்-கோயில்-0006.jpg

TVA_TEM_000158/TVA_TEM_000158_நாகப்பட்டினம்_அகஸ்தீசுவரர்-கோயில்-0007.jpg

TVA_TEM_000158/TVA_TEM_000158_நாகப்பட்டினம்_அகஸ்தீசுவரர்-கோயில்-0008.jpg

TVA_TEM_000158/TVA_TEM_000158_நாகப்பட்டினம்_அகஸ்தீசுவரர்-கோயில்-0009.jpg

TVA_TEM_000158/TVA_TEM_000158_நாகப்பட்டினம்_அகஸ்தீசுவரர்-கோயில்-0010.jpg

TVA_TEM_000158/TVA_TEM_000158_நாகப்பட்டினம்_அகஸ்தீசுவரர்-கோயில்-0011.jpg